கடந்த 2016-ம் ஆண்டில் மட்டும் காச நோயால் பாதிக்கப்பட்ட சுமார் 17 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது
மத்திய சுகாதார அமைச்சு மற்றும் உலக சுகாதார அமைப்பு ஆகியவை சார்பில் காச நோய் தொடர்பான உச்சி மாநாடு டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதன் போதே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அங்கு காச நோய் இல்லா இந்தியா என்ற பிரச்சாரத்தை தொடங்கி வைத் து உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, 2025-க்குள் இந்த நோயை ஒழிப்பதே இந்த பிரச்சாரத்தின் நோக்கம் எனத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச அளவில் வரும் 2030-ம் ஆண்டுக்குள் காச நோயை ஒழிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது எனவும் காச நோயை ஒழிப்பது தொடர்பான சர்வதேச நாடுகளின் முயற்சி வெற்றி பெற வில்லை என்பதனாபல் இந்த இலக்கை அடைய அணுகுமுறையில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டியது அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்
ஆண்டுதோறும் 1 கோடி பேர் காச நோயால் பாதிக்கப்படுகின்றனர் என்பதுடன் கடந்த 2016-ல் மட்டும் இந்த நோயால் பாதிக்கப்பட்ட சுமார் 17 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. –