166
தனக்கேரிய தனித்துவமான பாணியில் படங்களை இயக்கும் இயக்குனர் மிஷ்கின் முன்னணி நடிகர்களை வைத்தும் வித்தியாசமாக படங்களை தந்து வருகின்றார் இந்த நிலையில், தன்னுடைய அடுத்த படத்தின் நாயகனாக நடிக்க சாந்தனு பாக்யராஜ் ஒப்பந்தமாகியுள்ளார்.
ஜீவாவை வைத்து முகமூடி படத்தையும் விஷாலை வைத்து துப்பறிவாளன் படத்தையும் இயக்கிய மிஷ்கின் புதிதாக இயக்கவுள்ள படத்திற்கே சாந்தனுவை நாயகனாக தேர்வு செய்துள்ளார். மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான படம் ‘துப்பறிவாளன்’ படம் வரவேற்றை பெற்றது.
இப்படத்தை அடுத்து தன்னுடைய சகோதரர் இயக்கிய ‘சவரக்கத்தி’ படத்தின் கதையை எழுதி, தயாரித்தார் இயக்குனர் மிஷ்கின். அத்துடன் அப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். தற்போது ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ என்ற சுசீந்திரன் படத்தில் நடித்து வருகிறார் மிஷ்கின்.
Spread the love