குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ். குருநகர் பகுதியில் கஞ்சா போதை பொருளுடன் கைது செய்யப்பட்ட பெண்ணை எதிர்வரும் 20 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மேலதிக நீதிவான் உத்தரவிட்டுள்ளார். குருநகர் பகுதியில் உடமையில் 10 கிராம் கஞ்சா போதை பொருளை வைத்திருந்தார் எனும் குற்றசாட்டில் பெண் ஒருவரை நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாண காவல்துறையினர் கைது செய்திருந்தனர்.
குறித்த சந்தேக நபர் இன்று புதன்கிழமை யாழ்.நீதிவான் நீதிமன்றில் மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன் முன்னிலையில் முற்படுத்தப்பட்டார். அதனை அடுத்து மேலதிக நீதிவான் குறித்த சந்தேக நபரை எதிர்வரும் 20ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.