181
இவ்வருடத்தின் முதல் இரண்டு மாதங்களுக்குள் மாத்திரம் ஆயிரத்து 532 சிறுவர் துஸ்பிரயோகங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. பாலியல், உளவியல், உடலியல் மற்றும் புறக்கணிப்பு உள்ளிட்ட பல்வேறு வழிகளில் சிறுவர்கள் இவ்வாறு துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Spread the love