உலகம் பிரதான செய்திகள் விளையாட்டு

இண்டியன் வெல்ஸ் டென்னிஸ் தொடரில் சிமோனா – வீனஸ் காலிறுதிக்கு தகுதி


இண்டியன் வெல்ஸ் டென்னிஸ் தொடரின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் முதல்தர வீராங்கனையான சிமோனா ஹாலெப் கால் இறுதிக்கு தகுதி பெற்றார். அமெரிக்காவின் இண்டியன்வெல்ஸ் நகரில் நடைபெற்றுவரும் இந்த சர்வதேச டென்னிஸ் போட்டியின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ருமேனியாவின் சிமோனா ஹாலெப் சீனாவின் வாங் கியாங்கை 7-5, 6-1 என்ற நேர்செட்டில் வீழ்த்தி கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.

அதேவேளை மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் 7-6 (8-6), 6-4 என்ற நேர்செட்டில் லாத்வியாவின் அனஸ்டாசிஜா வீழ்த்தி கால்இறுதியை உறுதி செய்துள்ளார்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.