172
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
சமூக ஊடகங்களில் குரோத உணர்வைத் தூண்டுவதனை தடுக்க புதிய சட்டம் உருவாக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். புதிய சட்டங்களை உருவாக்குவது குறித்து சட்ட மா அதிபர் திணைக்களம் நடவடிக்கைகளை எடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார். உலகின் பல நாடுகளில் சமூக ஊடகப் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் சட்டங்கள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், சமூக ஊடக வலையமைப்புக்களை தடை செய்யும் எவ்வித திட்டங்களும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love