சர்ச்சைக்குரிய பேர்பச்சுவல் ட்ரஸரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோரின் தொலைபேசி உரையாடல் விபரங்களை புலனாய்வுப் பிரிவிற்கு வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மத்திய வங்கி பிணை முறி மோசடிகளுடன் இந்த இருவரும் தொடர்புபட்டிருப்பதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அலோசியஸ் மற்றும் பலிசேன ஆகியோருடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டவர்கள் பற்றிய விபரங்களை குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு வழங்குமாறு கொழும்பு கோட்டே நீதிமன்றம் இன்று, தொலைபேசி நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
அர்ஜூன் அலோசியஸ் – கசுன் பலிசேன ஆகியோர் நீதிமன்றத்துக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்….
Mar 15, 2018 @ 04:39
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பேர்பச்சுவல் ட்ரஸரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோரர் இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்துக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
மத்திய வங்கியின் முறி விநியோக மோசடி தொடர்பில் கடந்த பெப்ரவரி 4ம் திகதி இருவரதும் இல்லங்களை திடீர் சுற்றவளைப்பு நடத்தி முற்றுகையிட்ட குற்றப்புலனாய்வுத்துறையினர் இருவரையும் கைதுசெய்துள்ள நிலையில் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது