237
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வீதி விபத்துகளை தடுக்கும் நோக்குடன் பாடசாலை மாணவர்களுக்கு வீதி விதிமுறை தொடர்பிலான விழிப்புணர்வு செயற்திட்டங்களை காவல்துறையினர் முன்னெடுக்க உள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கைதடியில் உள்ள வடமாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை காவல்துறை அதிகாரிகளுக்கும் முதலமைச்சருக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலின் பின்னர் , அது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ,
வீதி விபத்துக்கள் , வீதி விதிமுறைகளை மீறி செயற்படுவதனால் தான் நடைபெறுகின்றது.எனவே வீதி விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். குறிப்பாக இளையவர்கள் வீதி விதிமுறைகளை கடைப்பிடித்து வீதிகளில் வாகனங்களை செலுத்த வேண்டும். அதேவேளை வீதி விதிமுறைகள் தொடர்பில் பாடசாலை மட்டத்தில் மாணவர்கள் மத்தியில் அது தொடர்பிலான விழிப்புணர்வு செயற்திட்டங்களை காவல்துறையினர் முன்னெடுக்க உள்ளனர் என தெரிவித்தார்.
Spread the love