குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ரஸ்யாவின் இரசாயன தாக்குதல்களுக்கு பிரித்தானியாவின் நட்பு நாடுகள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் எதிர்ப்பையும் கண்டனத்தையும் வெளியிட்டுள்ளன. இரண்டாம் உலகப் போரின் பின்னர் முதல் தடவையாக ஐரோப்பாவில் இரசாயன தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை இதுவே முதல் தடவையாகும். உளவாளி ஒருவரையும் அவரது மகளையும் இலக்கு வைத்து ரஸ்யா இந்த இரசாயன தாக்குதலை நடத்தியுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு இலக்கான செர்ஜி ஸ்கிரிபாலும் அவரது மகளும் தீவிர சிகிச்சை;ப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த தாக்குதலை ரஸ்யா மேற்கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்ப் தெரிவித்துள்ளார். மேலும் இரசாயன தாக்குதலுக்கு பல நாடுகளும் எதிர்ப்பை வெளியிpட்டு வருகின்ற நிலையில் தாக்குதலை நடத்தவில்லை என ரஸ்யா நிராகரித்து வருகின்றமை குறிப்பித்தக்கது