Home இலங்கைவீரம் விளைந்த வல்வை மண் சார்பாக பிரதான நுழைவு வளைவு என்கிறார் அங்கயன்..

வீரம் விளைந்த வல்வை மண் சார்பாக பிரதான நுழைவு வளைவு என்கிறார் அங்கயன்..

by admin
வடமராட்சி வல்லை வெளி முனியப்பர் கோவிலுக்கு அருகாமையில், யாழ் -பருத்தித்துறை பிரதான பயணப்பாதையில் வரவேற்பு நுழைவாயில் வளைவு நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனால் அமைக்கப்படவுள்ளது.

வரவேற்ப்பு வளைவுக்கான அடிக்கல்லை நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன்  இன்று 15/03/2018 நாட்டிவைத்தார் மேலும் இந்த நிகழ்வில் கரவெட்டி பிரதேச செயலாளர் ,பிரதேச செயலக உயர் அதிகாரிகள்,கிராம சேவையாளர்கள் சுதந்திர கட்சி உறுப்பினர்கள் பெரியோர்கள் வடமராட்சி பிரதேச மக்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

அங்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன்  நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் மக்களின் பேராதரவு கிடைக்கப்பெற்றிருந்தது எனவும், எனது எண்ணமாகவும் மக்களின் விருப்பமாகவும் இருந்ததன் விளைவாக,அதன் பிரதிபலிப்பாக வீரம் விளைந்த வல்வை மண் சார்பாகவும் பிரதான நுழைவு வளைவு அமையப்பெறவுள்ளது.என தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More