Home இலங்கை “இலங்கை தொடர்பான விடயத்தில் நாம் தொடர்ந்தும்  பாதிக்கப்பட்ட  மக்கள் பக்கமே நிற்போம்”

“இலங்கை தொடர்பான விடயத்தில் நாம் தொடர்ந்தும்  பாதிக்கப்பட்ட  மக்கள் பக்கமே நிற்போம்”

by admin

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத்  தொடரில் இலங்கை குறித்த இரண்டு விவாதங்கள் நடைபெறவுள்ள நிலையில்,   ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர்  சயிட் அல் ஹூசெய்ன் இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்கும் நோக்கில்  புதிய மாற்று பொறிமுறையை முன்னெடுக்குமாறு இலங்கையை வலியுறுத்துவார் என  எதிர்பார்க்கப்படுகின்றது.

ஏற்கனவே ஜெனிவா வளாகத்தில் நடைபெற்றுவரும்   இலங்கை தொடர்பான  உபகுழுக்கூட்டங்களில் கலந்துகொண்டு  உரையாற்றியிருந்த சயிட் அல் ஹூசெய்ன்   இலங்கை தொடர்பான விடயத்தில் தாம் தொடர்ந்தும்  பாதிக்கப்பட்ட  மக்கள் பக்கமே நிற்பதாக கூறியிருந்தார். அந்தவகையில் இன்று நடைபெறும் விவாதம் மற்றும்  எதிர்வரும்    21 ஆம்திகதி நடைபெறும் விவாதங்களின் போது  இந்த மாற்றுப் பொறிமுறை தொடர்பில்  சயிட் அல் ஹூசெய்ன்   வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில்,  2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு   பின்னர்  2017 ஆம் ஆண்டு  நீடிக்கப்பட்ட   இலங்கை குறித்த  பிரேரணையை இதுவரை இலங்கை முழுமையாக அமுல்படுத்தவில்லை என பல குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில்   பாதிக்கப்பட்ட மக்களின் சார்பில் நிற்போம் என    சயிட் அல் ஹூசெய்ன் தெரிவித்துள்ளதன் அடிப்படையில்,   இலங்கை குறித்து  நடைபெறும் இரண்டு விவாதங்களிலும்   இவை குறித்து  சயிட் அல் ஹூசெய்ன்   தனது அதிருப்தியை வெளிப்படுத்துவார் எனவும், கடும்    அழுத்தங்களை பிரயோகிப்பார் எனவும்    எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இதேவேளை  இலங்கை மனித உரிமை விவகாரம் தொடர்பில்   14  உபக்குழுக்கூட்டங்கள்  ஜெனிவா மனித  உரிமை பேரவை வளாகத்தில்  நடைபெற்று வருகின்றன.  இந்த  கூட்டங்களில்  இலங்கை பிரதிநிதிகள் பாதிக்கப்பட்டோரின் பிரதிநிதிகள் சர்வதேச நாடுகளின் தூதுவர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டு உரையாற்றிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More