Home இலங்கைகுற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறாத நிலைமை தொடர்கின்றது – ஸ்டீபன் ரெப்

குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறாத நிலைமை தொடர்கின்றது – ஸ்டீபன் ரெப்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

இலங்கையில் குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறாத நிலைமை தொடர்கின்றது என அமெரிக்காவின் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பான முன்னாள் பிரதிநிதி ஸ்டீபன் ரெப் தெரிவித்துள்ளார். அண்மையில் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகள் இடம்பெற்றமை குறித்து அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

கடும்போக்குடைய சிங்கள பௌத்தர்களினால், முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறாத அல்லது தண்டனை விதிக்கப்படாத நிலைமை நீடித்து வருவதே இதற்கான காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார். தண்டனை விதிக்கப்படாத நிலைமை காரணமாகவே இவ்வாறு ஆயுதம் ஏந்தி தாக்குதல் நடத்தப்படுவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More