உலகில் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் 116ஆவது இடத்தில இலங்கை உள்ளது. கடந்த ஆண்டு 120வது இடத்தில் இருந்த இலங்கை இம்முறை நான்கு இடங்கள் முன்னேறி உள்ளது ஐக்கிய நாடுகள் சபையினால் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில் 156 நாடுகள் பட்டியலிடப்பட்டன.
அதன்படி இதில் பின்லாந்து முதலிடம் பெற்றுள்ளதுடன், நோர்வே, டென்மார்க் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளன. இதில் இந்தியாவை விட இலங்கை முன்னேற்றகரமான நிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
மொத்த உள்நாட்டு உற்பத்தி, தனிநபர் வருமானம், சமூக உதவிகள், ஆரோக்கியமான வாழ்க்கை, சிறுவர் பாதுகாப்பு, சமூக சுதந்திரம், நன்கொடை வழங்கும் தன்மை, ஊழல் இல்லாத நிலை உள்ளிட்ட பல விடயங்கள் இதில் முக்கியத்துவம் பெறுகின்றன