கடந்த 23 ஆண்டுகளக்கு முன், பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் பீன்ட் சிங்கை கொலை செய்த வழக்கில் 43 வயது ஜக்தர் சிங் தாரா என்பவுக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது
கடந்த 1995-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பீன்ட் சிங் தலைமைச் செயலகத்துக்கு செல்லும்போது, அவரின் பாதுகாவலர் தில்பர் சிங் மனிதவெடிகுண்டாக மாறி கொலை செய்தமையினால் இதில் 17 பேர் கொல்லப்பட்டனர்.
சண்டிகர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று இந்த வழக்கில் 15 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு, 6 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். இந்த கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியாக செயல்பட்ட ஜக்தர் சிங் ஹவாரா, ரஜூனா, பரம்ஜீத் சிங், லக்விந்தர் சிங், பல்வந்த் சிங் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் கடந்த 2004-ம் ஆண்டு சிறையில் இருந்து ஜக்தர் சிங் தாரா தப்பி ஓடினார். நீண்டகாலமாக தேடப்பட்ட நிலையில், கடந்த 2015-ம் ஆண்டு, தாய்லாந்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட தாரா இந்தியா அழைத்து வரப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் சிறப்பு கூடுதல் செசன்ஸ் நீதிபதி ஜே.எஸ்.சித்து இன்று சிறைச்சாவைக்கு சென்று தீர்ப்பளித்தார். இதில் ஜக்தர் சிங் தாரா மீது கொலை, குற்றச்சதி, ஆயுத தடுப்புச்சட்டம் ஆகிய பிரிவின் கீழ் ஆயுள்தண்டனையும், 35 ஆயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது