பளையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். பளை காவற்துறைப் பிரிவுக்குட்பட்ட தர்மகேணி பகுதியில் இராணுவத்தின் பிக்கப் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதியதாலேயே இவ்விபத்து நேர்ந்துள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் படுகாயமடைந்த நிலையில் பளை பிரதேச வைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டார்.
ஒரு பிள்ளையின் தந்தையான 29வயதுடைய குணசீலன் ஜெசிந்தன் என்பரே உயிரிழந்தவர் என்பதுடன், 27 வயதுடைய தர்மகுலசிங்கம் தர்மகுமார் என்பவரே படுகாயமடைந்தவராவார். இவ்விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பளை காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.