Home இந்தியா“பாலியல் வன்புணர்வு அல்ல – பெண்ணின் சம்மதத்துடன் ஆன்மீகப் பேரின்பத்தை கொடுத்தார்”

“பாலியல் வன்புணர்வு அல்ல – பெண்ணின் சம்மதத்துடன் ஆன்மீகப் பேரின்பத்தை கொடுத்தார்”

by admin


அமெரிக்காவைச் சேர்ந்த இந்தியப் பெண், ஆன்மீக பேரின்பத்துக்காக, விருப்பப்பத்துடனேயே நித்யானந்தாவுடன் ‘செக்ஸ்’ உறவு வைத்து இருந்தார். அது பாலியல் வன்புணர்வு அல்ல. பெண்ணின் சம்மதத்துடன் உறவு கொள்வது வன்புணர்வு ஆகாது என பிரபல சுவாமியார் நித்தியானந்தாவின் வழக்கறிஞர் நாகேஷ் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

பெங்களூர் அருகே ராமநகரம் பகுதியில் ஆசிரமம் நடத்தி வரும் சுவாமியார் நித்யானந்தா மீது அமெரிக்காவைச் சேர்ந்த இந்தியப் பெண் பாலியல் வன்புணர்வு முறைப்பாட்டை செய்திருந்தார்.

இவர் சில வருடங்கள் பிடதி ஆசிரமத்தில் தங்கி இருந்தார். அப்போது “ஆன்மீக பேரின்பம்” என்ற பெயரில் தன்னை நித்யானந்தா பாலியல் வன்புணர்வு புரிந்ததாக காவற்துறையில் முறையிட்டு இருந்தார்.

அதன் அடிப்படையில் ராமநகரம் காவற்துறையினர், நித்யானந்தா மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தனர். நீதிமன்று அவருக்கு ஆண்மை பரிசோதனை நடத்த உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து கடந்த 2012-ம் ஆண்டு நித்யானந்தா உச்ச நீதிமன்றில் மனு தாக்கல் செய்தார். 2014-ல் நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டது. அதன்படி அவருக்கு பரிசோதனை நடந்தது. இதில் அவர் ஆண்மையற்றவர் அல்ல என முடிவு வெளியானது. பரிசோதனை முடிவை கர்நாடக சி.ஐ.டி. காவற்துறையினர் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு ராமநகரம் கோர்ட்டில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது நித்யானந்தா சார்பில் முன்னிலையான வழக்கறிஞர் நாகேஷ், நித்யானந்தாவின் பெயரையும், புகழையும் கெடுப்பதற்காக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. புகார் கூறியிருக்கும் பெண் ஆசிரமத்தில் பல வருடங்கள் தங்கி இருந்தார். அந்த வகையில், ஆன்மீக பேரின்பத்துக்காக, விருப்பப்பத்துடனேயே நித்யானந்தாவுடன் ‘செக்ஸ்’ உறவு வைத்து இருந்தார். அது பாலியல் வன்புணர்வு அல்ல என வாதிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More