பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான யோசனை வெற்றியீட்டும் எனவும், இலகுவில் நிறைவேற்றப்படும் என்ற பூரண நம்பிக்கையுண்டு எனவும் அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களும், சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களும் வாக்கெடுப்பின் போது ஆதரவளிப்பாளர்கள் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அரசியலில் பல்வேறு மாற்றங்களை சந்தித்து வருவதாகவும், இந்த சந்தர்ப்பத்தில் அமைச்சரவையில் மாற்றங்களைச் செய்ய வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சுதந்திரக் கட்சியின் ஆதரவின்றி 167 உள்ளுராட்சி மன்றங்களில் ஆட்சி அமைக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.