குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
போதைப் பொருள் குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டுமென அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ராம்ப் தெரிவித்துள்ளார். போதைப் பொருள் கடத்துவோருக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
போதைப் பொருள் குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களுக்கு மரண தண்டனை விதிப்பதற்கு தமது நிர்வாகம் விரும்பிய போதிலும் பல்வேறு எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். நியூ ஹம்செயாரில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வலி நிவாரணியாக பயன்படுத்தப்படும் ஒபிட் ரக மருந்து , போதைப் பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அமெரிக்காவில் சுமார் 2.4 மில்லியன் மக்கள் போதைப் பொருளுக்கு அடிமையாகியுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது