இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருதை இந்திய ஜனாதிபதி கோவிந்த் வழங்கியுள்ளார். டெல்லி ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெற்ற பத்ம விருதுகள் வழங்கும் விழாவிலேயே இவ்வாறு வழங்கப்பட்டள்ளது
இசைஞானிஇளையராஜா உட்பட மூன்று பேருக்கு பத்ம விபூஷண் விருதும் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி உட்பட ஒன்பது பேருக்கு பத்ம பூஷண் விருதும் தமிழகத்தை சேர்ந்த நாட்டுப்புற பாடகி விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன் உட்பட 72 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இன்று மாலை பத்ம விருதுகள் வழங்கும் விழா ஆரம்பமாகிய நிலையில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருதை ஜனாதிபதி கோவிந்த் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது