175
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கதிர்காமத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்றில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளார். தங்காலை காவல் நிலையத்தில் புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தராக கடமையாற்றி வரும் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.
காயமடைந்த காவல்துறை உத்தியோகத்தர் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தனிப்பட்ட தகராறு காரணமாக நாட்டுத் துப்பாக்கியொன்றின் மூலம் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love