குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நம்பிக்கையில்லா தீர்மானம் முறியடிக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினரும், அமைச்சரவை பேச்சாளருமான கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டால் அதற்கு ஐக்கிய தேசிய முன்னணியினர் எதிர்ப்பை வெளியிடுவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வசந்த சேனாநாயக்க மற்றும் பாலித ரங்கே பண்டார ஆகியோரும் பிரதமருக்கு ஆதரவாக வாக்களிக்க இணங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். கூட்டு எதிர்க்கட்சியினால் 113 வாக்குகளை பெற்றுக்கொள்ள முடியாது என்பது உறுதியானது என அவர் குறிப்பிட்டுள்ளார். நேற்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது கூட்டு எதிர்க்கட்சியின் பொறியில் எவரும் சிக்கி விடக் கூடாது என அமைச்சர் ராஜித சேனாரட்ன கோரியதாகத் தெரிவித்துள்ளார்.