201
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அவசரகாலச் சட்டத்தை நீக்குமாறு துருக்கியிடம் ஐக்கிய நாடுகள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. துருக்கியில் கடந்த 20 மாதங்களாக அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. பாரியளவிலான கைதுகள், பணி நீக்கங்கள் மற்றும் ஏனைய துஸ்பிரயோகங்களை அரசாங்கம் நிறுத்த வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளது.
2016ம் ஆண்டில் இடம்பெற்ற இராணுவ சதிப் புரட்சி முயற்சியைத் தொடர்ந்து 160,000 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தெரிவித்துள்ளது. இதேவேளை, இந்தக் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என துருக்கி வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
Spread the love