யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் ஸ்மாட் வகுப்பறைகள் (SMART CLASSROOMS) நேற்றைய தினம் (20.03.2018) சிறப்பாக திறந்து வைக்கப்பட்டது. மாறிவரும் உலகை மாணவர்கள் இலகுவாக வெற்றி கொள்ளவும், இருபத்தியோராம் நூற்றாண்டுக்கான மாணவர்களைத் தயார் செய்யவும் இன்றைய மாணவர்களை தயார்ப்படுத்தும் நோக்கில் மாணவர்களை கொண்டு செல்வதற்காக புதிய நவீன கற்றல் கற்பித்தலை மேற்கொள்ள வேண்டிய தேவை தற்போது எழுந்துள்ளது.
அந்த வகையில் உடனடியாகவும், வேகமாகவும் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் நவீன வகுப்பறைத் தொகுதிகள் திறந்து வைக்கப்பட்டன. கல்லூரி அதிபர் திருமதி.மி.விமலநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் யாழ்ப்பாணம் வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.தெய்வேந்திரராஜா பிரதம விருந்தினராக கலந்து கொண்டு ஸ்மாட் வகுப்பறைகளைத் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் நல்லூர் கோட்டக்கல்வி அதிகாரி திரு.F.X.அன்ரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
மேலும் பல நவீன வகுப்பறைத் தொகுதிகளை உருவாக்கும் பணியில் கல்லூரி நிர்வாகம் ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் அண்மையில் தரம் பெற்ற அதிபர்கள் பிரதி, உப அதிபர்களாக நியமனம் பெற்று கடமையாற்றி வருகின்றனர். அவர்களின் சிறந்த பணிகள் மூலமும் கல்லூரி மேலும் மேலும் மேலும் வளர்ச்சி அடைந்து வருவது சிறப்பம்சமாகும்.