174
சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் சார்பில் சுயேச்சைக் குழுவாக உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப்பெற்ற உறுப்பினர்கள் நேற்று(21-03-2018) பொது மக்கள் முன்னிலையில் உறுதியுரைத்து சத்தியப் பிரமாணம் செய்துள்ளனர்.
பிற்பகல் மூன்று முப்பது மணிக்கு கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி, பருத்தித்துறை நகரசபை உறுப்பினர்களே இவ்வாறு உறுதியுரைத்து சத்தியப் பிரமாணம் செய்துள்ளனர். இந்த நிகழ்வில் மதத் தலைவர்கள், சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் தாபகர் மு.சந்திரகுமார், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்
Spread the love