0
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீது எதிர்வரும் ஏப்ரல் 4ம் திகதி விவாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று நடந்த கட்சித் தலைவர்களின் விசேட கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கூட்டு எதிர்க்கட்சியினால் சமர்பிக்கப்பட்டுள்ள இந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நான்கு உறுப்பினர்களும் உட்பட 55 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். குறித்த பிரேரணையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மீது நம்பிக்கையில்லாமல் போவதற்கான 14 காரணங்கள் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Spread the love