174
விஜய் தொலைக்காட்சியின் மூலம் பிரபலமான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் இரண்டாவது பகுதியையும் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்குவதாக கூறப்படுகிறது. கடந்த வருடம் நூறு நாட்களுக்கு ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியை, நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.

இதில் நமிதா, காயத்ரி ரகுராம், சக்தி பி.வாசு, ஆரவ், ஓவியா, பிந்து மாதவி, கணேஷ் வெங்கட்ராம், வையாபுரி, கஞ்சா கருப்பு, ஸ்ரீ, காஜல் பசுபதி, ஜூலி, சினேகன், ரைஸா வில்சன், ஹரிஷ் கல்யாண், ஆர்த்தி, சுஜா வருணி, அனுயா, பரணி என மொத்தம் 19 பேர் போட்டியாளர்களாகக் கலந்துகொண்டனர். இதில், ஆரவ் வெற்றி பெற்றார்.
இந்நிலையில், ‘பிக் பாஸ்’ பகுதி 2 வருகிற ஜூன் மாதம் தொடங்க உள்ளது. இதனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கப் போகிறார் என கூறப்படுகிறது. கட்சிப் பணிகளுக்கு இடையில் ‘இந்தியன் 2’ படத்தில் நடிக்க இருக்கும் கமல், நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்க இருக்கிறார்.
Spread the love