இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையினால் நிறுத்தி வைக்கப்பட்ட ஒப்பந்தம் மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது. ஷமி மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்திய அவரது மனைவி ஷமி கிரிக்கெட் சூதாட்டத்திலும் ஈடுபட்டிருந்ததாக தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை ஷமியின் ஆண்டு ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்ததுடன் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் ஊழல் தடுப்பு பிரிவின் தலைவர் நீரஜ் குமார் விசாரணை நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் விசாரணை நடத்திய நீரஜ் குமார் சிஓஏ-யிடம் சமர்பித்த அறிக்கையில் ஷமி கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபடவில்லை ஈடுபடவில்லை எனவும் இதுகுறித்து மேலும் விசாரிக்க வேண்டியதில்லை எனவும் தெரிவித்துள்ளது. இதனையடுத்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையினால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஷமியின் ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்துள்ளது