அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கும் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன்னுக்கும் இடையில் நடைபெறவுள்ள சந்திப்புக்கு முன்னோட்டமாக அமெரிக்கா, தென்கொரியா, வடகொரியா ஆகிய நாடுகளின் வெளியுறவுத் துறை அதிகாரிகள் பின்லாந்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
வடகொரியாவின் அணு ஆயுத ஏவுகணை சோதனைகளால் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் எழுந்தது. இதை தணிக்க தென்கொரிய ஜனாதிபதி மேற்கொண்ட தீவிர முயற்சிகளின் பலனாக இந்தப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
அமெரிக்க மற்றும் வடகொரிய ஜனாதிபதிகள் எதிர்வரும் மேமாதம் சந்தித்துப் பேச்சுவார்த்தை மேற்கொள்ளவுள்ள நிலையில் அதற்கு முன்னோட்டமாக கடந்த திங்கட்கிழமை பின்லாந்தில் அமெரிக்கா, வடகொரியா, தென்கொரிய வெளியுறவு அதிகாரிகள் சந்தித்துப் பேசியுள்ளனர்.
இந்த சந்திப்பு ஆக்கப்பூர்வமாக இருந்தது எனவும் அமைதி முயற்சிகளுக்கு பின்லாந்து தொடர்ந்து ஆதரவு அளிக்கும் எனவும் இதுகுறித்து பின்லாந்து வெளியுறவுத் துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில தெரிவிக்கப் பட்டுள்ளது.