உலகம் பிரதான செய்திகள் விளையாட்டு

முத்தரப்பு இருபதுக்கு இருபது தொடரின் முதல் போட்டியில் அவுஸ்திரேலிய மகளிர் அணி வெற்றி

 


முத்தரப்பு இருபதுக்கு இருபது தொடரின் முதல் போட்டியில் அவுஸ்திரேலிய மகளிர் அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டியுள்ளது. நேற்றையதினம் நடைபெற்ற இந்திய மற்றும் அவுஸ்திரேலிய மகளிர் அணிகளுக்கிடையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய மகளிர் அணி 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 152 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இதனைத் தொடர்ந்து 154 என்ற வெற்றிஇலக்குடன் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய மகளிர் அணி 18.1 ஓவரில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 156 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியுள்ளது. அதேவேளை இந்த முத்தரப்பு தொடரில் இன்று அவுஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து அணிகள் போட்டியிடுகின்றன.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.