குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைமைகளுக்கு இலங்கை மத்திய வங்கியே பொறுப்பு சொல்ல வேண்டுமென முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். மத்திய வங்கி பிணை முறி மோசடிகள் மற்றும் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமைகளுக்கு மத்திய வங்கி பொறுப்பு சொல்ல வேண்டுமென தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி, பிரதமர், முன்னாள் ஜனாதிபதி மற்றும் அரசியல்வாதிகள் மீது பொருளாதார நெருக்கடி தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட போதிலும், மத்திய வங்கியின் பிழைகள் பற்றி எவரும் பேச முன்வருவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 16 வீத கடன் அடிப்படையில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட முடியுமா என கேள்வி எழுப்பியுள்ள அவர் மத்திய வங்கி வட்டி வீதங்களை உயர்த்தியமை பொருளாதாரத்திற்கு பெரும் நெருக்கடி நிலையை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மத்திய வங்கியின் அதிகாரிகள் தொடர்ந்தும் இவ்வாறு நிர்வாகம் செய்தால் இலங்கை உகண்டாவைப் போன்று மாற்றமடைந்துவிடும் என அவர் தெரிவித்துள்ளார்.