Home இலங்கை இனவெறுப்பு, இனவாததாக்குதல்கள், பாரபட்சம் ஆகியவற்றுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றம்..

இனவெறுப்பு, இனவாததாக்குதல்கள், பாரபட்சம் ஆகியவற்றுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றம்..

by admin

இலங்கையின் இனவாதத்திற்கு எதிரான இயக்கம் – பிரித்தானியா

இலங்கையில் மீண்டும் தலைதூக்கியுள்ள முஸ்லீம்கள் மீதான இனவாத தாக்குதல்களுக்கு எதிராகவும் எண்ணிக்கையில் குறைந்த தேசிய இன மக்களுக்கு விரோதமாக அதிகரித்துவரும் இனவெறுப்பு குற்றச்செயல்களுக்கு எதிராகவும், இனவெறுப்பு, இனவாததாக்குதல்கள், பாரபட்சம் ஆகியவற்றுக்கு எதிராகவும் செயற்படுவதற்கான திட்டவட்டமான மூலோபாயம் தொடர்பாக ‘இலங்கையின் இனவாதத்திற்கு எதிரான இயக்கம் –பிரித்தானியா.’ நிறைவேற்றிய தீர்மானங்கள்.

“ஈஸ்ட்ஹாம் டிரினிட்டி மண்டபத்த்தில்”17-03-2018ந் திகதி கூடிய முஸ்லிம், தமிழ், சிங்கள சமூகங்களின் பிரதிநிதிகளும், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளும்; சமூக-அரசியல் செயற்பாட்டாளர்களுமாகிய நாம்:

இலங்கையிலே எண்ணிக்கையில் குறைந்த தேசிய இன மக்களின் மீது மேற்கௌ;ளப்பட்ட இனவாதத் தாக்குதல்களின் நீண்ட , இருண்ட வரலாற்றை எடுத்துப் பார்க்கும் போதுஅவற்றில்; மிகக் கூடுதலானவை தமிழர்கள் , -மலையகத் தமிழ் மக்கள்மீதே மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதையும் இட்டு ஆழ்ந்த கவலையடைந்துள்ளோம.;

கடந்த சில வருடங்களாக முன்னொருபோதும் இல்லாதளவில் முஸ்லீம் விரோத இனவெறுப்பு குற்றச்செயல்கள் முஸ்லிம்களுக்கு எதிராக அதிகரித்து வருவதையும் , அத்தகைய செயற்பாடுகளை மேற்கொள்வோர் தண்டனைகளில் இருந்து விதிவிலக்கு பெறுவதையும் , அத்தகைய இனவாத சக்திகளுக்கு அரசின் பல முக்கிய புள்ளிகள் அனுசரணை வழங்கி வருவதையும் , தொடர்ச்சியாக மேலேங்கிவரும் வன்முறை-இனவாத சித்தாந்தத்தையும் இட்டு அச்சப்படுகிறோம்.

ஆரம்பத்தில் அரசாங்கம் துரிதமாக செயற்படாத காரணத்தால் அம்பாறையிலும் கண்டி பகுதியிலும் மீண்டும் தலைதூக்கிய திட்டமிட்டு முறைப்படுத்தப்பட்ட இனவாத நோக்கிலான முஸ்லீம்கள் மீதான தாக்குதல்கள் அரச ஊழியர் அல்லாதோரால் பௌத்த பிக்குகள் உட்பட பௌத்த தீவிரவாதிகளின் தலைமையிலே பாதுகாப்பு படையின் ஒரு பிரிவினரின் குறிப்பாக விசேட அதிரடி படையினரின் ஒத்துழைப்போடு மேற்கொள்ளப்பட்டதையிட்டு அதிர்ச்சியடைகிறோம்.

இவ்வன்செயலினால் ஏற்பட்ட உயிரிழப்புகளும் , அச்சுறுத்தலும் முஸ்லீம்களுக்கு சொந்தமான வீடுகள் , பெரிய தொழில் நிறுவனங்கள்; , சிறு வியாபார நிலையங்கள் – பள்ளிவாசல்கள் உள்ளிட்ட உடமைகளுக்கு ஏற்படுத்தப்பட்ட சேதங்களையும் இட்டு ஆழ்ந்த விசனம் கொண்டுள்ளோம்.

2018 ஐ.நா.வின் பரிந்துரையானது சகிப்புத்தன்மை ,பிறரை மதித்தல், ஐக்கியம் ,வேற்றுமையில் ஒற்றுமை ஆகியவற்றின் அடிப்படையில்; இனவாத பாகுபாட்டை தடுக்கவேண்டும் என்கிறது .ஆயினும் இலங்கை இனவாதமற்ற அரசு என்ற நிலைக்கு வெகுதூரம் பின்னால் நிற்பதோடு சமூகங்களை ஒன்றோடொன்று மோதிவிடும் போக்கு இங்கு தொடர்கிறது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அரசாங்கம் தோற்கடிக்கப்பட்ட பின்னர், ஆட்சிக்கு வந்த இன்றைய அரசாங்கம் இனங்களிடையே அமைதியையும் நீதியையும் நிலைநாட்டும் என்ற அதன் உறுதிமொழியை நிறைவேற்றும் என்ற நம்பிக்கை பிறந்தது. ஆயினும் இலங்கையின் அடித்தளத்தையே அச்சுறுத்தும் இனப் பாகுபாட்டையும் தப்பெண்ணங்களையும் இனவெறுப்புணர்ச்சியையும் தடுத்து நிறுத்துவதற்கான எவ்வித செயற்பாட்டையும் அதனிடம் காணாதது , சமாதானத்தினை நேசிக்கும் இலங்கையர்களையும் , புலம்பெயர்ந்த மக்களையும், சர்வதேச சமூகத்தையும் ஏமாற்றம் கொள்ளச் செய்துள்ளது.

எமது நாட்டின் அனைத்து மக்களுக்கும் வழங்கிய இந்த உறுதி மொழியை நிறைவேற்றத்தவறியமைக்காக அரசாங்கத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

இனவாத அலையை எதிர்கொண்டு இனவாதத்திற்கு எதிராக எழுந்து நின்ற முறுத்தலாவ பௌத்த பிக்குகளையும் அப்பிரதேச மக்களையும், ஆனமடுவ மக்களையும்,கெக்கிராவ, அவிசாவெல பிக்குகளையும்; கண்டி-தங்கொல்லையைச் சேர்ந்த முச்சக்கர வண்டி ஓட்டுனர்களையும் அவ்வாறு செயற்பட்ட ஏனையோரையும்; ஜேவீபி அமைப்பையும் ஏனைய சில அரசியல்தலைவர்களையும் சிவில் அமைப்புகளையும் பாராட்டுவதோடு மரியாதையோடு அவர்களுக்கு நன்றியைத் தெரிவிக்கிறோம்.

அத்துடன் , பின்வருவனவற்றை உடனடியாக நிறைவேற்றுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம்:

1. மேற்படி வன்செயலின் போது பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் முழுமையான நிவாரணத்தை உடனடியாக அரசாங்கம் வழங்க வேண்டும். அவற்றில் இழப்பீடு,; நஷ்டஈடு, புனருத்தாபனம் என்பனவற்றோடு மீண்டும் அத்தகைய நிகழ்வுகள் நடைபெறாது என்ற உத்தரவாதமும் உள்ளக்கப்பட வேண்டும்.

2. அனைத்து இன மக்களுக்கும், இனவாத நோக்கிலான தாக்குதல்களிலிருந்து போதுமான பாதுகாப்பு வழங்கப்படுதல் வேண்டும். அத்தகைய இனவாத நோக்கத்துடனான தாக்குலைத் தூண்டுகின்ற அமைப்புகளையும் இனவெறுப்பு பேச்சுகளை மேற்கொள்கின்ற அமைப்புகளையும் இனவெறுப்புக்கு தூபமிடுகின்ற அமைப்புகளையும் சட்டரீதியாக தடைசெய்வதுடன் எந்த ஒரு இனவாத அமைப்புடனும் நேரடியாகவோ மறைமுகமாக தொடர்பு வைத்திருந்தமை நிரூபிக்கப்பட்ட மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள்; – எத்தகைய உயர்ப்பதவிகளை வகித்த போதும்- எவரையும் பதிவியிலிருந்து மீளழைப்பதற்கு அல்லது பதவியிலிருந்து அகற்றுவதற்கு ஏற்புடையாக பொறிமுறை ஒன்று உருவாக்கப் படுதல் வேண்டும்.

3. இனவாத வெறுப்பு குற்றச்செயல்கள் சார்புடை நோக்கத்தின் அடிப்படையில் புரியப்பட்ட கிரிமினல் குற்றங்களாக வரையறுக்கப்பட்டு அவற்றைக் கையாள்வதற்கு ஏற்றவகையில் கிரிமினல் சட்டங்;களும் கொள்கைகளும் வகுக்கப்படுவதோடு இன வன்முறையில் அல்லது மதரீதியான வன்முறையில் பங்குகொள்வோர், ஈடுபடுவோர் , அதனைத் தூண்டுவோர், அதற்கு அனுசரணை வழங்குவோர் ஆகியோருக்கு எதிராக கிரிமினல் சட்டநடிக்கை மேற்கொள்ளப்படுதல் வேண்;டும். அத்துடன் அத்தகைய வழக்கு விசாரணைகள் துரிதப்படுத்தப்படுவதுடன் அதற்கான போதிய நிதி ஒதுக்கீடு வழங்கப்படுதல் வேண்டும். தண்டனை விதிவிலக்கு காலச்சாரம் ஒழிக்கப்பட்டு அனைவரும் சட்டத்தின் முன் சமமாக நடத்தப்படுதல் வேண்டும்.

4. தீரா பாகுபாடுகளை நிவர்த்திசெய்யும் விதத்திலும் ,ஒடுக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விசேட ஏற்பாடுகளை வழங்கக் கூடிய விதத்திலும் அரசியல் யாப்பில் மாற்றங்கள் செய்யப்படல் வேண்டும். அதேவேளை விசேட உரிமைகளையும் பாதுகாப்பையும் வழங்கும் வகையில் சட்டங்களும் சட்டமூலங்களும் உருவாக்கப்படுதல் வேண்டும்.

5. சாட்சிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொறிமுறையுடன் கூடிய சகல சமூகங்களையும் சேர்ந்த ஆணையாளர்களைக் கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்படுதல் வேண்டும்.. இவ்வாணைக்குழுவின் நோக்கம் உண்மையை மூடிமறைப்பதாகவோ சம்பந்தப்பட்டவர்களை பாதுகாப்பதாகவோ ஒரு போதும் இருக்க முடியாது.விசாரணை ஆணைக்குழு சட்டத்தை விரைவில் அமுல் படுத்தத் தவறிய பாதுகாப்புப்பிரிவினர்களின் செயற்பாடுகள்;; தொடர்பாகவும், வன்முறையில் ஈடுபட்டோர் ,பங்குகொண்டோர் ,அனுசரணை வழங்கியோர், தூண்டியோர் ஆகியோரது ஈடுபாடு குறித்தும் உண்மையாகவும் முழுமையாகவும் விசாரணை செய்து சட்ட நடவடிக்கை எடுப்பதாக அமைதல் வேண்டும்.

6. ஐசீசீபிஆர் சட்டத்தை முழுமையாக ஏற்று நடைமுறைப்படுத்தவும் ,இனவெறுப்பு பேச்சுகளையும், தீவிரவாத மத அமைப்புகளையும் தடை செய்யவும் ,குற்றமிழைத்தோரை சட்டத்தின் முன் நிறுத்தவதற்கு ஏற்ற சட்டங்களை உருவாக்கவும், இழைக்கப்பட்ட சேதங்களுக்கான நஷ்ட ஈட்டை அதில் ஈடுபட்டோர், தூண்டியோர் ,அனுசரணை வழங்கியோர் ஆகியோரிடமிருந்து அறவிடக் கூடிய விதத்தில் அதற்கான சட்டங்களை உருவாக்குவதற்காகவும் அனைத்து கட்சிகளினதும் தலைவர்கள் கலந்துகொள்ளும் சா;வகட்சி மாநாடு ஒன்றிணைக் கூட்ட வேண்டும்.

7. பொலிசிலும் இராணுவத்திலும் ஒரு இனம் மாத்திரம் எண்ணிக்கையில் தனியாதிக்கம் செலுத்துகின்ற அசமத்தவத்தை சரிசெய்யும் விதத்தில் இவ்விரு சேவைகளிலும் ஏனைய சமூகத்தைச் சேர்ந்தோர் சேர்த்துக்கொள்ளப்படுதல் வேண்டும். அத்துடன் அவசரநிலைகள் ஏற்படும் தருணங்களில் இன முறுகல் நிலையை அல்லது இன வன்செயலைக் கையாள்வதற்காக கடமையில் ஈடுபடுத்தப்படும் இராணுவத்திலும் ,பொலிஸ் பிரிவிலும் ஒரு இனத்தினைச் சேர்ந்தவர்கள் ஐம்பது சதவீதத்திற்கு அதிகமாக அதில் இடம்பெறக்கூடாது என்பதை நடைமுறைப்படுத்த விசேட ஏற்பாடுகள் செய்யப்படல் வேண்டும்.

8. நைஜீரியா நாட்டில் இருக்கும் சமாதான படை போன்றதோர் சிவில் அமைதி காவலர் பிரிவு ஒன்று பல்கலை;க்கழக பயிலுனர் பட்டதாரிகளைக் கொண்டு உருவாக்கப்படுதல் வேண்டும். இவர்களுக்கு இராணுவபயிற்சி வழங்காது சமூக உறவு தொடர்பாக பயிற்சியளிக்கப்பட்டு அவர்கள் சாராத பிற சமூகங்கள் மத்தியில் ஒருவருட காலம் வாழ்ந்து அங்குள்ள சமூக அமைப்புகளுடன் இணை;ந்து பொதுச் சேவையில் ஈடுபடுத்தப்படுதல் வேண்டும். இதன்மூலம் சமூகங்களுக்கிடையிலான தொடர்பு பரிமாற்றமும் புரிந்துணர்வும் நெருக்கமடைந்து இனங்களுக்கிடையே நல்;லிணக்கம் ஏற்படுத்த வழிவகுக்கவேண்டும்.

9.பாடசாலை பாடவிதானத்தை அரசியல் கருவியாகப் பயன்படுத்தி ஒருவகையான இனவாத சித்தாந்தத்தை உருவாக்கி மாணவர்களின் சிந்தனையையும் முழு சமுதாயத்தின் சிந்தனைப் போக்கையும் அதன் மூலம் வழிகாட்டும் நிலைமை முடிவுக்குவரவேண்டும். அதற்கு பதிலாக பாடசாலை பாட விதானங்கள், மத- இன சகிப்புத்தன்மையை ஊக்குவித்து; வேறுபட்ட மதத்தினரிடையே சகவாழ்வுக்கான பக்குவத்தை ஏற்படுத்தும் விதத்தில் சீர்திருத்தம் செய்யப்படுதல் வேண்டும்.

சிவில் சமூகங்களிடம் பின்வரும் வேண்டுகோள்களை விடுக்கின்றோம்:

10.இன ,மதத் தலைவர்களின் உச்சி மாநாடு ஒன்றினைக் கூட்டி சிங்கப்பூரில் இருப்பதைப்போன்ற நல்லிணக்க சட்டமூலம் ஒன்றினை அதன் நோக்கம் மாறாத விதத்தில் உருவாக்கி, இலங்கையில் வேறுபட்ட மதத்தினரிடையே சகவாழ்வுக்காகவும் இனவெறுப்பு குற்றங்களையும் இனவாதத்தையும் தடுப்பதற்கான வேலைத்திட்டம் ஒன்றினை முன்னெடுக்க வேண்டும்.

11. முறுத்தலாவையிலும் ஆனமடுவையிலும் இன்னும் பலபகுதிகளிலும் உண்மையான சமாதான முன்னெடுப்பாளர்களால் துணிகரமாக முன்னெடுக்கப்பட்ட பயணத்தை இதே நோக்கத்தைக் கொண்டுள்ள சிவில் அமைப்புகளையும் அரசியல் கட்சிகளையும் இணைத்துக்கொண்டு முன்செல்ல வேண்டும் இதன் மூலம் இளந்தலைமுறையினாpன் இதயங்களில் நம்பிக்கையை ஏற்படுத்தி எதிர்காலத்தினை நம்பிக்கை மிகுந்ததாக மாற்ற முன்வரல் வேண்டும்.

இக்கோரிக்கைகளை அமுல்படுத்துமாறு இலங்கை அரசுக்கு அழுத்தும் கொடுப்பதற்கு இலங்கையிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளினதும்; மதஅமைப்புகளிதும்; ஏனைய சிவில் அமைப்புகளினதும்; இதே நோக்குள்ள வெளிநாடுகளில் வாழும் இலங்கையர் அமைப்புகளினதும் சா;வதேச அமைப்புகளினதும் ஒத்துழைப்பை வேண்டி நிற்கின்றோம்.

‘இலங்கையின் இனவாதத்திற்கு எதிரான இயக்கம் – பிரித்தானியா

21மார்ச் 2018

Spread the love
 
 
      

Related News

1 comment

Logeswaran March 24, 2018 - 2:15 pm

2015ம் ஆண்டு உலக நாடுகள் பல ஓன்று சேர்ந்து தமிழர்களுடனும் மற்றும் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் ஆதரவுடனும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் பல தீர்மானங்களை எடுத்தார்கள். அவைகளின் சிலவற்றை நான்கு இலக்குகளைக் குறிப்பிடலாம். அவையாவாது

1.உண்மையைத் தேடி, பொறுப்புக் கூறி, நீதி வழங்குங்கள்.

2.இழப்பீடுகளைக் கொடுங்கள்.

3.கொடூர குற்றங்களை மீண்டும் செய்யாது தடுங்கள்.

4.நல்லிணக்கத்தை உருவாக்குங்கள்

மேலே கூறிய இலக்குகளை அடைய இலங்கை அரசாங்கத்தை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் மூலம் கட்டாயப்படுத்தினால் “இலங்கையின் இனவாதத்திற்கு எதிரான இயக்கம் – பிரித்தானியா” பரிந்துரைத்த 11 வகையான பணிகளை நிறைவு செய்ய முடியும்.

Reply

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More