குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரெக்சிற் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் பிரித்தானியாவிற்கும் இடையில் சாதகமான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்கால பொருளாதார ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக பிரித்தானிய பிரதமர் திரேசா மே தெரிவித்துள்ளார்.
உருக்கு வரி தொடர்பில் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு விலக்கு அளித்தமை வரவேற்கப்பட வேண்டியது எனவும், நிரந்தரமாக சலுகைகளை பெற்றுக்கொள்வதற்காக ஒன்றியத்தின் 27 தலைவர்களுடனும் இணைந்து செயற்படப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இரு தரப்பிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் சாதகமான முனைப்புக்களுடன் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் திரேசா மே தெரிவித்துள்ளார்.