குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அரசியல் ரீதியாக அனாதையாக்கும் நோக்கிலேயெ நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளன. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம், ஜனாதிபதியை மலினப்படுத்தும் நோக்கிலானது என சுட்டிக்காட்டியுள்ளது. ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அடுத்த கட்டமாக ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணை ஒன்று கொண்டு வருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவடையச் செய்து அதன் ஊடாக ஜனாதிபதியை நிர்க்கதி நிலைக்குத் தள்ளும் வியூகமொன்றை கூட்டு எதிர்க்கட்சி வகுத்து வருவதாகத் தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பல அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ராஜபக்ஸக்களுடன் இணைந்து செயற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.