உலகம் முழுவதும் சுமார் 12 கோடி பேர், பட்டினியால் உயிரிழக்கும் ஆபத்தில் உள்ளதாக ஆபத்தான நிலையில் இருக்கின்றனர் என ஐ.நா.வின் உலக உணவு அமைப்பின் செயல் இயக்குநர் டேவிட் பியாஸ்லி தெரிவித்துள்ளார். நியூயார்க்கில் நேற்று நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு பேரவையின் கூட்டத்தில், வீடியோ உரையாடல் மூலமாக உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளர்h.
சோமாலியா, ஏமன், தெற்கு சூடான், நைஜீரியா ஆகிய நாடுகளில்மட்டும் சுமார் 32 கோடி பேர் பசி வேளைக்கு உணவின்றி பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் போர் மற்றும் உள்நாட்டு மோதல்களால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது எனவும் அரசியல் ஸ்திரமற்ற சூழல் நிலவி வரும் நாடுகளில், கடுமையான உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேற்குறிப்பிட்ட மக்கள், உணவின்றி பட்டினியால் வாடுவதற்கு பிரதான காரணமாக விளங்குவது உள்நாட்டு குழப்பம் மட்டுமே. எனவே, ஐ.நா. பாதுகாப்பு பேரவை இந்த விவகாரங்களில் தலையிட்டு அதுபோன்ற நாடுகளில் அமைதி ஏற்பட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.