150
யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுலாக் கடற்கரையில் கடலுக்குள் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளுக்கான தொடுப்புப் பாலங்கள் சீராக பராமரிக்கப்படுவதில்லை எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்த சுற்றுலாக் கடற்கரை நகர அபிவிருத்தி அதிகார சபையால் 18 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டது.
இங்கு தினமும் குடாநாட்டிலிருந்தும் வெளிமாவட்டங்களிலிருந்து வருகை தரும் பல நூற்றுக்கணக்கானோர் தமது பொழுதைக்கழிக்கின்றனர். எனினும் பண்ணைக் கடலுக்குள் அமைக்கப்பட்டுள்ள தொடுப்புப் பாலங்கள் சீராக பராமரிக்கப்படாமையால், அவற்றை சுற்றலாப் பயணிகள் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நகர அபிவருத்தி அதிகார சபையும் யாழ்ப்பாணம் மாநகர சபையும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரப்பட்டுள்ளது.
படங்கள்: ஐ.சிவசாந்தன்
Spread the love