177
யாழ்ப்பாணம், காங்கேசன்துறை பிரதான வீதியின், முட்டாசுக்கடை சந்தியில் அமைந்துள்ள முஸ்லிம் வர்த்தக நிலையம் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதுப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் இன்று இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத நபர்கள் குறித்த கடைமீது பெற்றோல் குண்டு தாக்குதல் மற்றும் கற்களை வீசிவிட்டு சென்றுள்ளனர்.
இதனால் குறித்த கடையின் கண்ணாடிகள் நொறுங்கியுள்ளதுடன், பெற்றோல் குண்டு வெடித்தனால் கடையின் சிறிதளவு பகுதி சேதமடைந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் காசற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். அந்த வகையில் தனிப்பட்ட தகறாரே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமைக்கான காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்…
Spread the love