குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி ஏ9 பிரதான வீதியில் நகர மத்தியில் யுத்தகாலத்தில் வீழ்த்தப்பட்ட நீர்தாங்கி உடைக்கப்பட்டு வருகிறது. கடந்த அரசின் காலத்தில் குறித்த நீர்த்தாங்கி பயங்கரவாத அழிவுச் சின்னமாக பாதுகாக்கப்பட்டு வந்த நிலையில் அது தற்போது அகற்றப்பட்டு வருகிறது.
நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்குச் சொந்தமான காணியில் வீழ்த்தப்பட்ட நீh்த்தாங்கி யுத்தகால சின்னமாக அரசினால் பேணப்பட்டு வந்த நிலையில் தறபோது அது அகற்றப்படுகிறது. குறித்த காணி ஜந்து மாதங்களுக்கு முன் நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்கு கையளிக்கப்பட்ட நிலையில் நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையினர் வீழ்த்தப்பட்ட நீர்தாங்கியை உடைத்து அகற்றி வருகின்றனர்