165
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ரஸ்யாவில் இடம்பெற்ற தீ விபத்தில் உயிழந்தோர் எண்ணிக்கை 64 ஆக உயர்வடைந்துள்ளது. ரஸ்யாவின் சைபீரியாவில் அமைந்துள்ள அங்காடி ஒன்றில் இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து குறித்த எச்சரிக்கை சமிக்கை கட்டமைப்புக்கள் காணப்படவில்லை எனவும், ஆபத்து நேரத்தில் வெளியேறக் கூடிய அவசர வெளியேற்ற கதவுகள் அனைத்தும் முடக்கப்பட்டிருந்தன எனவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர்களில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் சிறுவர் சிறுமியர் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love