பேஸ்புக் பயனாளிகளின் இரகசியங்களை கேம்பிரிட்ஜ் அனலைட்டிக்கா நிறுவனத்துக்கு கசிய விட்டது தொடர்பாக விசாரிக்கும் பாராளுமன்ற குழுவின் முன் mark zuckerberg முன்னிலையாக மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களின் ஜாம்பவனாக விளங்கும் பேஸ்புக் நிறுவனத்தினால் சமீபத்தில் ஏற்பட்ட குழப்பம் மோடி அப், வரை சென்றுள்ளது. அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக சுமார் 5 கோடி அமெரிக்க மக்களின் தகவல்களை பேஸ்புக் நிறுவனம், லண்டனைச் சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்னும் நிறுவனத்திற்கு வழங்கியதாக பகிரங்கமான குற்றச்சாட்டு எழுந்தள்ளது.
இவ்வாறே, பிரிட்டன் நாட்டில் பேஸ்புக் பயன்படுத்தி வருபவர்களைப் பற்றிய தகவல்களும் களவாடப்பட்டதாக தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்த பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. பேஸ்புக் நிறுவனர் mark zuckerberg அல்லது அவரது நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப உயரதிகாரி பாராளுமன்ற விசாரணை குழுவின் முன்பாக முன்னிலையாகி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தக் குழுவின் விசாரணையில் mark zuckerberg முன்னிலையாக மாட்டார் எனவும், அவருக்கு பதிலாக பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப உயரதிகாரி மைக் ஸ்குரோப்ஃபெர் ஆஜராகி விளக்கம் அளிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.