கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, பேஸ்புக் நிறுவனர் mark zuckerberg மற்றும் ருவிட்டர் தலைமை செயல் அதிகாரி ஆகியோருக்கு அமெரிக்க பாராளுமன்ற குழு ஆணை அனுப்பியுள்ளது.
பேஸ்புக் சேவையை பயன்படுத்தும் சுமார் ஐந்து கோடி பேரின் தகவல்கள் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா எனும் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக பேஸ்புக், கூகுள் மற்றும் டுவிட்டர் நிறுவன தலைமை செயல் அதிகாரிகள் விளக்கம் அளிக்க அமெரிக்க பாராளுமன்ற குழு அழைப்பாணை அனுப்பியுள்ளது.
இதன்படி பேஸ்புக் நிறுவனர் mark zuckerberg , கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை மற்றும் ஜேக் டார்சி ஆகியோர் ஏப்ரல் 10-ம் திகதிக்குள் பாராளுமன்ற நீதித்துறை குழுவின் முன் முன்னிலையாக விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக சுமார் 5 கோடி அமெரிக்க மக்களின் தகவல்களை பேஸ்புக் நிறுவனம், லண்டனைச் சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்னும் நிறுவனத்திற்கு வழங்கிய விவகாரம் பெரும் அரசியல் சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.