இந்திய மத்திய அரசின் முத்தலாக் ஒழிப்பு சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மகாரஷ்டிரா மாநிலத்தில் நேற்று முஸ்லிம் பெண்கள் பேரணி நடத்தியுள்ளனர். ஒரே நேரத்தில் முத்தலாக் என்று கூறி மனைவியை விவாகரத்து செய்யும் கணவனுக்கு மூன்றாண்டு சிறை தண்டனை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியுள்ள முத்தலாக் முறையை ஒழிப்பதற்கான சட்ட மசோதா பாராளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, எதிர்க்கட்சிகளின் ஒப்புதல் கிடைக்காததால் மாநிலங்களவையில் முடங்கியுள்ளது.
இந்நிலையில், முஸ்லிம் தனிசட்டத்தில் அரசின் தலையீடு கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் பேரணி இடம்பெற்றது. இந்தப் பேரணியில் மத்திய அரசின் முடிவுக்கு எதிரான பதாகைகளுடன் இந்த பேரணியில் பெண்கள் கலந்துகொண்டனர்.