குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவரான ஸ்டீவன் ஸ்மித் மற்றும் முன்னாள் உதவித் தலைவரான டேவிட் வார்னர் ஆகியோருக்கு ஓராண்டு கால போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது. பந்தை வேண்டுமென்றே சேதப்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தென் ஆபிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் வைத்து பந்து காயப்படுத்தப்பட்டிருந்தது.
கமருன் பென்கொரப்ட் என்ற அவுஸ்திரேலிய அணி வீரர், பந்தை காயப்படுத்தும் காட்சிகள் வெளியிடப்பட்டிருந்தன. பந்தை திட்டமிட்ட அடிப்படையில் காயப்படுத்தி அதன் ஊடாக பந்தை ரிவர்ஸ் ஸ்விங் செய்யச் செய்து விக்கட்டுகளை வீழ்த்த முயற்சித்தோம் என அணியினர் தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை தென் ஆபிரிக்க அணிக்கு எதிரான நான்காம் டெஸ்ட் போட்டி ஆரம்பமாக உள்ள நிலையில், ஸ்மித், வார்னர் மற்றும் பென்கொரப்ட் ஆகியோர் அவுஸ்திரேலியாவிற்கு மீள அழைக்கப்பட்டுள்ளனர். எந்தவொரு காலத்திலும் வார்னருக்கு அணித் தலைவர் பதவி வழங்கப்படாது என அவுஸ்திரேலிய கிரிக்கட் சபை அறிவித்துள்ளது.