குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கட்சி வழங்கும் எந்தவொரு பொறுப்பினையும் ஏற்றுக்கொள்ளத் தயார் என வீடமைப்பு அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தின் பின்னர் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கட்சியின் தலைமைப் பொறுப்பினை ஏற்றுக்கொள்ளத் தயாரா என ஊடகவியலாளர்கள்
எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைமைத்துவம் தொடர்பிலான தீர்மானங்களை வீதியில் வைத்து எடுக்க முடியாது எனவும், அவை கட்சியின் கட்டமைப்புக்குள் எடுக்கப்பட வேண்டியது எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் வதந்திகள் பரப்பக் கூடாது எனவும் உரிய நேரத்தில் உரிய விடயங்கள் நடைபெறும் எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.