பப்புவா நியூகினியாவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள நியூபிரிட்டன் தீவில் உள்ள ரபாயுல் பகுதியில் ஏற்பட்ட இந்தநிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.9ஆக பதிவாகியுள்ளது இதனால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கியதாகவும் அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது கடற்கரையில் பூமிக்கு அடியில் 35 கி.மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதனால் அங்கு வழக்கத்தைவிட உயரமான அலைகள் எழும்பியதனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. கடந்த பெப்ரவரி மாதம் அங்குள்ள எங்கா மாகாணத்தில் ஏற்பட்ட 7.5 ரிக்டர் நிலநடுக்கத்தால் 100 பேர் உயிரிழந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
பப்புவா நியூகினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை…
154
Spread the love
previous post