பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு அதரவளிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு பணிக்க வேண்டுமென கூட்டு எதிர்க்கட்சி கோரியுள்ளது. கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
பிரதமர் ரணில்விக்ரமசிங்கவின் பதவிகளை ஒன்றொன்றாக குறைப்பதில் எவ்வித பயனும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வெறும் கிளைகளை எழுமாறாக வெட்டுவதனை விடவும் பிரதமர் ரணில்விக்ரமசிங்கவை பதவி நீக்குவதே மிகவும் பொபாருத்தமான தீர்மானம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவளிக்குமாறு ஜனாதிபதி, சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுக்க வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
Spread the love
Add Comment