கிழக்கு மாகாணத்தில் உருவாகிவரும் தமிழ் முஸ்லிம் இனமோதல் புயலின் கண்ணாகும் ஆபத்தை கல்முனை பிரதேசம் எதிர்கொள்கிறது. அண்மைக்காலங்களில் கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக கல்முனை பிரதேசத்தில் தமிழ் முஸ்லிம் கிராமங்களின் எல்லைகளில் பதட்டம் அதிகரித்து வருவது கவலை தருகிறது. எதற்காக தமிழ் முஸ்லிம் அரசியல் தலைமைகள் இதை இன்னமும்கண்டுகொள்ளவில்லை. .யாருக்காக அவர்கள் அமைதியாகக் காத்திருக்கிறார்கள்.?
.
கல்முனை தமிழர் முஸ்லிம்கள் மத்தியில் பதட்டம் தொடர்வதும் கலவரமாக வெடிப்பதும் முழு அம்பாறை மாவட்டத்தையும் சீர்குலைத்துவிடும். ஒரு இஞ்சி மண்ணுக்கு மோதி முழு அம்பாறை மாவட்டதையும் அப்பமாக தூக்கி குரங்கிடம் கொடுத்து விடாதீர்கள். சீர்குலைக்க வழி வகுத்துவிடாதீர்கள். உடனடியாக தடுத்து நிறுத்துங்கள்.
.
வெலிஓயாபோல மற்றும் திருகோணமலைபோல புதுப் புது கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த சிங்கள குடியேற்றங்களும் பெளத்த புனித பூமிகளுக்குமே அம்பாறை மாவட்ட தமிழர் முஸ்லிம் பிழவும் எதிர் நிலையும் போதல்களும் வழிவகுக்கும். தமிழ் முஸ்லிம் தலைவர்களே சிவில் சமூகமே இளைஞர்களே தயவு செய்து காலத்தே செயல்படுங்கள். வெள்ளைகொடிகளுடன் தெருவில் இறங்குங்கள்.
கல்முனை அபாய அறிவிப்பு – வ.ஐ.ச.ஜெயபாலன்…
155
Spread the love