197
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
சுகாதார சமூக நலன்புரி நிலைய திறப்பு விழாவும் , இலவச மருத்துவ முகாமும் இன்று நடைபெற்றது. கந்தையா உபாத்தியார் வீதி , கந்தரோடை பகுதியில் புதிதாக அமைக்கபட்ட சுகாதார சமூக நலன்புரி நிலையத்தினை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரன் திறந்து வைத்தார்.
அதனை தொடர்ந்து இலவச மருத்துவ முகாம் நண்பகல் 12 மணி முதல் மாலை 03 மணிவரை நடைபெற்றது. அதன் போது பெருமளவானவர்கள் மருத்துவ முகாமில் சிகிச்சை பெற்று சென்றனர். குறித்த மருத்துவ முகாம் நாளை காலை 10 மணிமுதல் மாலை 02 மணிவரை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
Spread the love