குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வலி.வடக்கு பிரதேச சபைக்கான தவிசாளர் தெரிவு நடைபெறாத நிலையில் வலி.வடக்கு பிரதேச தவிசாளர் என சோ.சுகிர்தன் நிகழ்வொன்றில் கலந்து கொள்கின்றார். நல்லூர் பிரதேச சபை உறுப்பினராக கு.மதுசூதனன் தெரிவாகியமைக்கு பாராட்டு தெரிவித்து இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கோண்டாவில் சிவநேசன் திறந்த அரங்கில் பாராட்டு விழா நடைபெறவுள்ளது.
அந்நிகழ்வில் விழா நாயகனுக்கு வாழ்த்துரைப்பவர்கள் என பெயரிடப்பட்டு உள்ள இடத்தில் வலி.தெற்கு பிரதேச சபை தவிசாளர் சோ.சுகிர்தன் என பெயரிடப்பட்டு உள்ளது. நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலின் பின்னரான உள்ளூராட்சி சபைகளுக்கான தவிசாளர் தெரிவு தற்போது நடைபெற்று வருகின்றது. அந்நிலையில் வலி.வடக்கு தவிசாளர் தெரிவு இடம்பெறாத நிலையில் இன்றைய நிகழ்வில் சோ.சுகிர்தன் வலி.வடக்கு பிரதேச சபை தவிசாளராக கலந்து கொள்கின்றார்.
வலி. வடக்கில் தமிழரசு கட்சி 17 ஆசனங்களை பெற்றுள்ள போதிலும் , ஈழமக்கள் ஜனநாயக கட்சி 08 ஆசனங்களையும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 06 ஆசனங்களையும் , தமிழர் விடுதலை கூட்டணி 02 ஆசனங்களையும் . ஐக்கிய தேசிய கட்சி 02 ஆசனங்களையும் , ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி 04 ஆசனங்களையும் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.