காசா – இஸ்ரேல் எல்லைப்பகுதியில், கடந்த வெள்ளிக்கிழமை, பாலத்தீனர்கள் நடத்திய பேரணியின்போது இஸ்ரேல் படையினர் மேற்கொண்ட தாக்குதலில் குறைந்தது 16 பேர் பலியான சம்பவம் தொடர்பாக சுயாதீன விசாரணை மேற்கொள்ளுமாறு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அண்டானியோ கட்டரஸ் அழைப்பு விடுத்துள்ளார். இந்த சம்பவத்தினை பாலத்தீனர்கள் தேசிய துக்க தினமாக அனுசரித்து வருகின்றனர்.
தங்களது ஆறு வாரகால போராட்டத்தை ஆரம்பிப்பதற்காக காசாவிலுள்ள ஆயிரக்கணக்கான பாலத்தீனர்கள் இஸ்ரேலின் எல்லையை நோக்கி பேரணியாக சென்ற போது இஸ்ரேல் படையினர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியிருந்தனர். அதேவேளை பாலத்தீன மக்களுக்கான பாதுகாப்பு தேவையை ஐ.நா பாதுகாப்பு பேரவையிடம் பலத்தீன பிரதமர் முஹமத் அப்பாஸ் வலியுறுத்தியுள்ளதுடன் கலவரத்தில் குறித்த போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டமைக்கு இஸ்ரேலிய அதிகாரிகள்தான் முழு பொறுப்பு எனவும் தெரிவித்துள்ளர்h.