குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விமான பணியாளர்களினால் மேற்கொள்ளப்பட உள்ள போராட்டமொன்றை கருத்திற்கொண்டு இவ்வாறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மூன்று நாட்களுக்கு கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் கலகத் தடுப்பு காவல்துறையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் விமானப்படையினர் மற்றும் கமாண்டோ படைப் பிரிவைச் சேர்ந்த 1500 படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
விமான நிலையப் பணியாளர்களின் சம்பளத்தை 10, 000 ரூபாவினால் உயர்த்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவிற்கு எதிராகவே இந்தப் போராட்டம் நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது